முகப்புஎம்மைப்பற்றிதொடர்புகளுக்கு
மண்டபம் புகைப்படங்கள்காணொளிகள்நிகழ்வுகள்அறிவித்தல்கள்நாட்காட்டி  
கோவில் நேரம்
காலை : 6.00 - 9.00
மாலை : 4.00 - 7.00
நண்பகல் : 12.00 - 1.00
பூஜை நேரம்
காலை : 7.00-8.00
மாலை : 5.00-6.00
அர்ச்சனைகள்
பழ அர்ச்சனை:
C$ 6
காளாஞ்சி அர்ச்சனை:
C$ 10
மோட்ச அர்ச்சனை:
C$ 50
108 அர்ச்சனை:
C$ 30
  முகப்பு >> அறிவித்தல்கள் >> திருவிழா  
   
 

ஈழத்து திருச்செந்தூர் என அடியார்களால் போற்றப்படுவதும் வரலாற்று புகழ் மிக்கதுமாய் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் அம்பாறை மாவட்டத்தில் தென்திசையில் அக்கரைப்பற்றிலிருந்து 8 மைல் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவில் எனும் திருப்பதி பல ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளை நாவற்தருவும் சுவைதரும் நீர்சுனைகளும் அமைந்துள்ள இயற்கை வளத்தோடு இயங்கியதால் வெள்ளை நாவற்பதி என்று விளங்கியதென்பர். வீரமகேந்திரபுரியை ஆட்சிபுரிந்த சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்ட வேளை சூரனை வெல்லவென்று விடுத்த வேல் அவன் மார்பைப் பிளந்து ஆகாயக் கங்கையில் நீராடி புனிதம் பெற்று திரும்பும் வழியில் வாகூர மலையை பிளந்தது என்றும் அதன் பக்கம் மூன்று குளங்களையும் அகழ்ந்து திருக்கோவில் வெள்ளை நாவல் மரத்திலே வந்து தங்கியது. காடு சுற்றிவந்த வேடுவர்கள் வெள்ளை நாவல் மரத்திலே ஒளிவீசும் தங்க வேலொன்று பிரகாசிப்பதைக் கண்டு இலை குழைகளால் கொண்டு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோவிலைத் தமிழரின் இரண்டாம் படை எழுச்சியின் போது வந்த சோழநாட்டு மன்னர்களால் தென்னிந்திய சிற்பசாத்திர முறைப்படி கல்லினாற் கட்டி முடித்தனர் என்றும் வேடரது பந்தலுக்குள் வடக்கு முகமாக வீற்றிருந்த வேலானது புதிய கற்கோவிலாலும் கிழக்கு முகமாக திரும்பிவிட்ட காரணத்தினால் `திருக்கோவில்\\\\\\\' (திரும்பிய கோவில்) என்று பெயரிட்டனரெனவும் திருக்கோவில் பற்றிய பதிகம் கூறுகிறது.

 
   
உபயம்
தி. மகேசன் குடும்பம்
2011-12-28
தி. மகேசன் 2 குடும்பம்
2011-12-07
யசோதரன் குடும்பம்
2011-11-30
வரவிருப்பவை
மேலும்