  முருகன் இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். |