FAIL (the browser should render some flash content, not this).
இரதோற்சவம்

கனடா கந்தசுவாமி கோவில் வருடாந்த இரதோற்சவம் இன்று ஞாயிறு (August 08, 2010) காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் உசக்கால பூசை, அபிஷேகம், காலைச்சந்திப் பூசை, தம்ப பூசை, வசந்தமண்டபப் பூசையையடுத்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் காலை 9:30 மணிக்கு தேரில் ஆரோகணம் செய்வார்.காலை 11 மணியளவில் இரதம் இருப்பிடத்தை வந்தடையும்.

மாலை பச்சைசாத்தி யதாஸ்தானம் திரும்புதல், சன்முகர்ச்சனை, பிராயச்சித்தாபிசேகம், தேரடித்திருவிழா என்பனவும் நடைபெறும்.

அடியார்கள் அனைவரும் கலந்து கந்தனின் அருள் பெறுவீர்.

காலை
5:30 - உசக்கால பூசை
6:00 - அபிஷேகம்
7:00 - காலைச்சந்திப் பூசை
7:30 - தம்ப பூசை
8:30 - வசந்தமண்டபப் பூசை

மாலை
2:30 - பச்சைசாத்தி யதாஸ்தானம் திரும்புதல்
3:30 - சன்முகர்ச்சனை
4:30 - பிராயச்சித்தாபிசேகம்
8:30 - தேரடித்திருவிழா